| இரமேஸ்வரத்தில் எல்லோரும் குளித்து கரை ஏறுகிறார்கள் நாங்கள் குதித்து கரை ஏறுகிறோம் பிறந்த குழந்தைய்ன் நெற்றியில் வைக்கிறாள் பிடி மண்ணாய் கொண்டு வந்த தாய் மண் கடல் கடந்து பார்க்க வந்ந்திருக்கின்றன சோறு வைத்த காக்கைகள் படகில் ஏறினோம் படகை விற்று ஆழிப் பேரலைகளும் எங்கள் பெண்களை வீடு புகுந்து இழுத்து போய் கொல்லத்தான் செய்தன ஆனாலும் இலங்கை வானொலியில் இருந்து நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து கேட்கிறீர்கள் நாங்கள் மரண அறிவித்தல் கேட்கிறோம் முகாமிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்து கேட்கிறாது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" இப்படிக்கு வலிகளுடன் உங்கள் சொந்தங்கள் | ![]() |
Showing posts with label ஈழத்தின் கண்ணீர். Show all posts
Showing posts with label ஈழத்தின் கண்ணீர். Show all posts
Tuesday, 22 December 2009
ஈழத்து வலி
ஈழத்தின் கண்ணீர்தானோ
| அலைகள் தழுவும் தேசத்தில் கொலைகள் தொடர்வதும் ஏனோ? விடுதலை வேண்டி வாழும் மாந்தர்க்கு உரிமை மறுப்பது தர்மம்தானோ? நாற்புறம் சூழ்ந்த கடல் நீரினிலே உவர்ப்பை நிறைத்தது எங்கள் கண்ணீர்தானோ? | ![]() |
ஈழத்தின் பரிதாபம்
| அந்தோ பரிதாபமமா தாயின் வயிற்றிலிருக்கும் போதே உண்ணவில்லை இந்த ஈழ தாயிடம் தான் பிறப்பேன் என்று முன்பே எண்ணவில்லை எங்காவது காமத்திற்கும் வறுமைக்கும் பொறுப்பற்றதனத்திற்கும் பஞ்சத்திற்கும் பிறந்திருக்க கூடாதா அல்லது ஈழம் பிறந்த பிறகு பிறந்திருக்க கூடாதா மொட்டுக்களே பூப்பதற்கு முன்பே கருகிவிட்ட்டிர்களே ....! அதற்கென்ன ஈழம் பிறந்த பிறகு இன்னொரு பிறவி எடுப்போம்..! | ![]() |
ஈழத்திற்கு தந்த வரங்கள்
| தீபாவளியை போல போர்முனையில் வெடிக்கும் ஆயிரம் சரங்கள் வீடு திரும்பும் நாள் வருமா என்று வீரர்களின் ஏக்கங்கள் நாட்டில் அவர் செய்ய காத்திருக்கும் பல ஆக்கங்கள் எப்போது வெடிக்குமோ என்று விழித்திருந்து விட்ட தூக்கங்கள் அதனால் அவர் உடலில் ஏற்பட்ட பல தாக்கங்கள் நிரைவேறாமல் போன பல நல்ல உள்ளங்களின் நோக்கங்கள் அதற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் உள்ளக் கூக்குரல் கே ட்காமல் சண்டையிடும் செவுடுகள் கத்திப் பேசினாலும் யாரும் கேட்காமல் காய்ந்த உதடுகள் இதெல்லாம் கடவுள் இந்த ஈழத்திற்கு தந்த வரங்கள்...! | ![]() |
Subscribe to:
Posts (Atom)



